Sunday, February 17, 2013

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள்?

ஆண்கள் ஏன் அடிக்கடி சேனல் மாற்றுகிறார்கள் என்பதற்கு பல சுவாரஸ்யமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எட்டு:



1. ரிமோட் கண்ட்ரோல் என்பது ஆண்களுக்கு ஒரு விதமான சக்தி தருகிறது. 'நான்தான் குடும்பத் தலைவன். எனக்குக் கீழ்ப்படிந்துதான் டி.வி. உள்பட எல்லாரும் இயங்க வேண்டும்' என்கிற ஆணாதிக்கச் செயல் என்கிறார்கள்.

2. ஒரு மனைவியின் கூற்றின்படி... 'என் கணவரால் என்னை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ரிமோட் கண்ட்ரோலை இம்சை செய்கிறார்.'

3. ஆண்களின் ஆதிகால வேட்டையாடும் குணத்தின் நவீன வடிவம் இது. கையில் ரிமோட் வைத்திருக்கும் ஆண் சுவாரஸ்யமான இரைகளைத் தேடும் வேட்டை மிருகம்.

4. ஆண்களுக்கு உடனடியாக காரியம் நடக்க வேண்டும். மேலும் கொஞ்சம் சந்து கிடைத்தால் 'அங்கே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது... அதைத் தவறவிடக்கூடாது' என்கிற எட்டிப் பார்க்கும் ஆசையும் உண்டு.

5. எப்போதுமே ஆண்களுக்குக் கொஞ்சம் அலையும் ஆசையும், இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்கும் ஆசையும் உண்டு. 'இதைப் பார்த்தாகிவிட்டதே... வேறு எதாவது கிடைக்கிறதா பார்ப்போம்' என்கிற நப்பாசை.

6. ஒரு எலி, பூனை, நாய் போல பாவ்லாவியன் ரிஃப்ளக்ஸாக (Pavlovian Reflex) பட்டனை அழுத்தும்போதெல்லாம் சந்தோஷம் கிடைத்தால் அதிகம் சேனல் மாற்றமாட்டார்கள். ஆனால், அப்படிக் கிடைப்பதில்லை. அதனால் சந்தோஷத்தைத் தேடி இன்னும் இன்னும் தாவல்.

7. ரிமோட் கண்ட்ரோல் என்பது, ஒரு கணவன் தன் மனைவியைச் சுலபமாக வெறுப்பேற்றுவதற்கான சாதனம்.

8. ஒரு மனைவி எழுதியிருந்தார் - 'என் கணவனுக்கு பக்கவாதம் வந்து மெள்ள மெள்ள செயலிழந்து கொண்டிருந்தார். கடைசிவரை அவரால் தன்னிச்சையாகச் செய்ய முடிந்த காரியம் - ஒரு பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் ரிமோட்டின் பட்டனை அமுக்குவதே. அந்தக் காரியம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையும் இழந்த பின் அவர் இறந்துபோனார்.'

- சுஜாதா
கற்றதும் பெற்றதும் நூலில் இருந்து..

ஓசூர்

அரிது!



ஓசூர் அருகே 1860ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்!!
 

யானைக்கு ‘சுகர் பிராப்ளம்’





பக்தியின் காரணமாகவோ அல்லது பாசத்தின் காரணமாகவோ இந்த யானைக்கு அதிகப்படியாக கொடுக்கப்பட்ட பழங்களை சாப்பிட்டு,சாப்பிட்டு இப்போது யானைக்கு ‘சுகர் பிராப்ளம்’ வந்துருச்சாம்.,அதுனால எனக்கு பழம் வேண்டாம் என்று யானை தன் உடம்பில் எழுதப்பட்ட வாசகம் மூலம் சொல்லிவருகிறது.

அழகிய ஈழம்!!


இடம் : திரிகோணமலை 



நன்றி : Kruze León

http://www.facebook.com/KruzePhotography

மின் கட்டண விபரம்!!



வீடு வீடாக சென்று மின் அளவை கணக்கீடு எடுக்கும் மின் ஊழியர்களிடம் ஒரு அட்டை எப்போதும் இருக்கும். மின் கட்ட‍ண மீட்ட‍ரில் உள்ள‍ அளவுகளை குறித்துக்கொண்டும், அந்த அளவுகளுக் கான மின் கட்ட‍ணம் எவ்வ‍ளவு என்பதனை அவரிடம் உள்ள‍ ஒரு அந்த அட்டையை பார்த்து கணக்கிட்டு, நாம் கொடுக்கும் மின் அட்டையில் மின் அளவு மற்றும் கட்ட‍ வேண்டிய தொகையினை குறித்துக் கொடுப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் தொகை யை நாமும் அப்ப‍டியே கொண்டு போய் மின்வாரிய அலுவலகத்தில் செலுத்தி விட்டு வருகிறோமே! அதை ப்பற்றிய அடிப் படை அறிவு
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-
.



1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
.
நிலைக்கட்டணம் இல்லை.
.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டு க்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)

.
இரண்டாம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்து விடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உப யோகி த்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆக மொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)
.
மூன்றாம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.

நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகி க்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)
.
நான்காம் நிலை:-
.
1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00

.
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+ கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆக மொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்த வேண்டும்)
.
கடைகளுக்கானது:-
.
1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில்

அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில்



இடம் : விருத்தாசலம்(திருமுதுகுன்றம்)

அழகியல்!!



இடம் : சேலம், குரும்பபட்டி பூங்கா



படம் : Guru Karthi

பசுமைப் புரட்சி

கோவையை சார்ந்த தாய் மரம் என்ற குழுவினர் மரம் வளர்ப்பதை ஊக்குவிப்பதிற்காக ஒரு புதிய அமைப்பு ஒன்றை நிறுவி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.அதன் செயல் வடிவம்
பின்வருமாறு



உங்கள் நிலத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தாத உபரி இடம் இருந்தால் மரம் நடுவதற்கு அனுமதியுங்கள்.

மரம் நடுவதற்கு ஏற்ற இடம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது. ப்ரணவ பீடம் அறக்கட்டளை நட்சத்திர மரங்களை இலவசமாகவே வழங்க இருக்கிறது. உங்களுக்கு மரம் நடும் ஆர்வம் இருந்தால் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். மற்றவை இயற்கை தானாகவே பார்த்துக்கொள்ளும்.

சில இயற்கை அமைப்புக்கு உகந்த நிலையில் நட்சத்திர மரக்கன்றுகளை நடுவதன் மூலம் சுற்று சூழலை தன்வசமாக்கி மரங்கள் ஆதிக்கம் செலுத்த துவங்கும். அதனால் மாசுபடுதல் குறையும் மற்றும் தாவர இனப்பெருக்கம் அதிகரிக்கும்.

இந்த பணியை இலவசமாகவே செய்கிறோம். மரக்கன்றுகள் இலவசம். முதல் சில வருடங்களுக்கு இலவச பராமரிப்பும் செய்கிறோம். குறைந்த பட்சம் 5 சென்ட் பயன்படுத்தாத இடம் தேவை. அதிகமாக எத்தனை பெரிய இடமாக இருந்தாலும் நலம்.

இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் இப்பணியை இலவசமாக செய்ய காத்திருக்கிறோம்.

தாய் மரம் உருவாக்க இணைந்து பணியாற்ற விரும்பினாலும் இத்திட்டத்தை பற்றிய மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டாலும் மின்னஞ்சல் செய்யுங்கள்


Karthicktours@gmail.com
தொலைபேசி : +91 9944 1 333 55


நன்றி : பசுமைப் புரட்சி

செங்கோட்டை- சிறு அறிமுகம்!


திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடியில் கேரள எல்லையில் அமைந்த, இயற்கை அழகின் எழில் சார்ந்த நகரம் செங்கோட்டை ஆகும்.

கேரளத்திலிருந்து 52 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியை "நல்லூர் ராஜா" என்பவர் ஆண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வூரின் மேற்கு பகுதியிலுள்ள நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து மகாதேவர் கோயில், அதையொட்டிய அரண்மனை தீர்த்தகுளம், சுற்றியுள்ள கோட்டை போன்றவற்றை காலம் சிதைத்த அடையாளங்களாக இன்றும் காணலாம். அக்கோட்டைதான் செங்கோட்டை என அழைக்கப்பட்டதாக தெரிகிறது.




மேலும் செங்கோட்டை பல மகான்கள் அவதரித்த பூமியாகும். இங்கு நகரை சுற்றி ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் நிறைந்திருப்பதை காணலாம். இங்கு சிவனடியார்கள் அதிகமாக இருந்ததால் சிவன் கோட்டை என்ற பெயரும் இருந்தது. காலப்போக்கில் சிவன்கோட்டை மருவி செங்கோட்டை என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.

பல ஆண்டு காலமாக கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம் அன்று திருவாங்கூர் மன்னர்களின் தனிக்கவனத்தை ஈர்த்தது. இந்நகரை சுற்றி 28 குளங்கள் உள்ளன. முன்பு கேரளாவோடு இருந்தபோது யாராவது திருவாங்கூர் மகாராஜாவை சந்திக்க சென்றால் தச்சன்குளம் தண்ணீர் புன்னை மரத்தை தொட்டு விட்டதா என்றுதான் முதலில் கேட்பாராம் . தச்சன்குளம் நிரம்பினால் முப்போகம் விளைவது உறுதி என்பது மகாராஜாவுக்கு தெரியுமாம்.

மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள மிக சிறிய நகரம் செங்கோட்டை. 1956ம் ஆண்டு வரை கேரள எல்லைக்குட்பட்டிருந்தது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிந்து 1-11-1956ல் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இவ்வூர் தாலுகா அந்தஸ்து பெற்ற ஊராகும்.

இவ்வூரின் நுழைவு பகுதியில் ஒரு வளைவு அமைக்கபபட்டுள்ளது. அந்த வளைவின் இருபுறங்களிலும் இருகற்சிலைகள் 5 அடி உயரத்தில் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் சங்குவடிவம் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

துவாரபாலகர் சிலை:
வடபுறம் துவர பாலகர் சிலை வலது கரத்தின் ஒரு விரலை காட்டியபடி இடதுகரத்தின் மடக்கி மூடிவைத்தபடியும் உள்ளது. இச்சிலை குறித்து செங்கோட்டையில் சிற்பகலை கூடம் நடத்தி வரும் சிற்பி மணி ஆசாரி கூறுகையில், துவாரபாலகர் சிலைகள் பெரிய ஆலயங்களில் மூலஸ்தானத்திற்கு செல்லும் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும்.

அந்த சிலை போல் செங்கோட்டை நகர நுழைவு பகுதியில் வைக்கப்பட்டதின் நோக்கம் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆன்மீக பூமியாக விளங்கியது. அதன் நுழைவு பகுதியாக செங்கோட்டை இருந்ததால் ஊரின் நுழைவு பகுதியில் துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இரு சிலைகளுக்கு இரண்டு கதைகள் உண்டு.

ஊருக்குள் நுழையும்போது வலப்பக்கம் அமைந்துள்ள சிலை ஒருவிரலை காட்டியபடியும், மற்றொரு கரம் மடித்து வைத்தும் இருக்கிறது. இவ்வூருக்குள் நுழையும் நீங்கள் ஒரே நிலைப்பாட்டோடும், வேறு சிந்தனையின்றி மனதை அலைபாயவிடாமல் எண்ணங்களை அடக்கி அமைதியாக உள்ளே வாருங்கள், உங்களது பிரச்சனையை நான் தீர்க்கிறேன் என்றும், இடதுபுறம் அமைக்கப்பட்டுள்ள சிலை இறைவனை நம்பி இவ்வூர் வந்தவர்கள் மனபாரம் அகற்றி வெளியேறுங்கள் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுபோன்று எனக்கு தெரிய எந்த ஊரிலும் ஊரின் நுழைவு பகுதியில் இதுபோன்ற சிலைகள் அமைக்கப்படவில்லை. மாற்றாக வேறு சாமி சிலைகள் தான் காவல் தெய்வங்களாக வடிவமைத்து வைத்துள்ளனர் என்றார்.

செங்கோட்டை என்றழைக்கப்படும் அன்றைய சிவன்கோட்டையில் நுழைவிலேயே பழமைவாய்ந்த ஏராளமான ஆலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அழகியல்!



இடம் : தன்னூத்து, திருநெல்வேலி மாவட்டம் 




படம் : Vel Murugan T

இதுதான் பார்வை!



ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்குப் பார்வை கிடையாது.







அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான்.

அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார்.

சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான்.

அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார்.

மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன் "துறவியாரே, வணங்குகிறேன். இதற்கு முன்பு இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக்
கேட்டதா? தயவு செய்து கூறுங்கள்" என்று பணிவோடு கூறினான்.

உடனே துறவி, " மன்னர் பெருமானே, வணக்கம். இந்த வழியாக முதலில்
ஒரு வீரன் சென்றான். அடுத்து ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியைத்தான் கேட்டனர்." என்றார்.

மிகவும் வியந்த அரசன், " துறவியாரே, தங்களுக்குப் பார்வை இல்லை. அப்படி இருந்தும் நான் அரசன் என்றும், முன்னால் சென்றவர்கள் வீரன், அமைச்சர் என்றும் எப்படி அறிந்தீர்கள்? என்று கேட்டான்.

"அரசே, இதைக் கண்டறிய பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே அவர் யார், அவர் தகுதி என்ன என்பதை எல்லாம் அறிய முடியும்."

முதலில் வந்தவர் சிறிதும் மரியாதையின்றி கேள்வி கேட்டார்.

அடுத்து வந்தவர் பேச்சில் அதிகாரம் தொனித்தது.

ஆனால் தாங்களோ மிகவும் பணிவாகப் பேசுகிறீர்கள்." என்று விளக்கினார் அந்த பார்வையற்ற துறவி.


நன்றி : தமிழ் -கருத்துக்களம்-
 

கோவில்பட்டி

கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.



சாத்தூர் தாலுகாவை சார்ந்த சிற்றூராக இருந்த கோவில்பட்டி இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் வருவாய் தரும் தொழில்சார்ந்த நகரமாக விளங்குகிறது. இவ்வூருக்கு கோயிற்புரி, திருப்பூவனம், பொன்மலை, கோயில்புரி என்றெல்லாம் பெயர் விளங்குகிறது.சிற்றூராக இருந்துவந்த இவ்வூரானது இன்று ஒரு சிறப்பு நிலைநகராட்சியாகத் திகழ்கிறது. பல வகைகளிலும் சிறப்புப் பெற்ற பல ஊர்கள் செண்பகவல்லியம்மன் கோவில் திருத்தலத்தை சுற்றிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பான ஒன்றாகும்.

இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, நிலக்கடலை மற்றும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு லக்ஷ்மி, லாயல் எனும் இரண்டு பெரிய நூற்பாலைகள் அமைந்துள்ளன. கோவில்பட்டி நகரம் தீப்பெட்டி தயாரிப்புக்கு பெயர் பெற்றது. இங்கு சில பட்டாசுத் தொழிற்சாலைகளும் உண்டு.

கோவில்பட்டி கடலை மிட்டாய் மிகவும் பிரசித்தி பெற்றது. புரட்சிக்கவி பாரதியார் பிறந்த எட்டயபுரம் இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு உறுதி?




வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நிராகரித்துள்ளார். இதனால் அவர்கள் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிகிறது. கடந்த 1993-ஆம் ஆண்டு பாலார் காட்டில், வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து 21 போலீஸாரை குண்டு வைத்துக் கொன்றனர். இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் ஞானப் பிரகாசம், சைமன், மாதையா, பிலவேந்திரன் என்கிற‌ நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். நான்கு பேரின் சார்பில் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அளிக்கப்பட்டன. தற்போது அந்த மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். இதனால் நாலவரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இவர்கள் நான்கு பேரும் கர்நாடகவில் உள்ள‌ பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எல்லாம் சரி காவல் துறை மற்றும் அதிரடிப்படை போலிஸால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட பல குடும்பங்களின் தற்கொலைக்கு காரணமான காவலர்களுக்கு என்ன தண்டனை??
 

இவங்க எல்லாம் நம்ம ஆளுங்க தான்!!


இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது.



ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள் உள்ளன. இந்த ஜீன் கலப்பு 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்திருப்பதும் தெரிகிறது. இங்கு குடியேறிய இந்திய பழங்குடியினர் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு கருவிகள் செய்யும் தொழில்நுட்பத்தையும் சொல்லித் தந்துள்ளனர் என்கின்றர் ஆராய்ச்சியாளர்கள்.
ஜெர்மனியின் லெய்ப்சிக் நகரில் உள்ள மேக் பிளாங்க் ஆய்வு மையத்தின் Evolutionary Anthropology (மானிட பரிணாமவியல்) பிரிவின் மரபியல் (geneticist) வல்லுனரான மார்க் ஸ்டோன்கிங் தலைமையிலான குழு தான் இந்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பழங்குடியினரின் ஜீன்களை ஆய்வு செய்து, அவைகளில் ஏற்பட்ட கலப்புகள், மாற்றங்கள், இடம் பெயர்வுகளை மிக விரிவான அளவில், உலகம் முழுவதும் பயணித்து ஆய்வு நடத்தி வருகிறார் மார்க்.
ஆஸ்திரேலியப் பழங்குடியினர், ஆஸ்திரேலியா அருகே உள்ள பபுவா நியூகினியா தீவுகள் ஆகிய இடங்களில் உள்ளோரிடம் 344 சாம்பிள்கள் எடுக்கப்பட்டு, அவை தெற்காசியா, இந்தியா, அமெரிக்கா, சீன இனத்தினரின் ஜீனோம்களுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் இந்திய ஜீன்கள் ஆஸ்திரேலியாவில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இந்திய பழங்குடியினர் ஆஸ்திரேலியாவில் காலடி வைத்து அந்த நாட்டினரின் இனத்தினருடன் கலந்துள்ளனர்.

இந்த ஜீன் கலப்பு 141 தலைமுறைகளுக்கு முன் நடந்திருப்பதையும் ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த காலகட்டத்தில் தான் ஆஸ்திரேலிய பழங்குடியினர் கற்களால் ஆன கருவிகளை செய்யும் தொழில்நுட்பத்தையும் அறிந்தனர். இதனால் இந்தக் கலையும் இந்திய பழங்குடியினரால் தான் இங்கே அறிமுகமாகியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த ஜீன்கள் திராவிட மொழிகளைப் பேசும் இந்தியாவின் தென் பகுதிகளில் இருந்து வந்திருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை என்கிறார்கள்.
அதே போல இந்த பழங்குடியினர் தான இந்திய நாய்களை ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நாய்களின் ஜீன்களில் நடந்த ஆராய்ச்சிகளில் இது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் காட்டு நாய்களான 'டிங்கோ', இந்தியாவில் இருந்து தான் வந்தன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

http://tamil.oneindia.in/editor-speaks/2013/01/genomes-link-aboriginal-australians-to-indians-168301.html#slide48543

ஞாபகம் இருக்கா???

அந்த நாட்கள் இனிமையாகத்தான் இருந்தன. 

ஆனால் இப்பொழுது?

யோசிப்போம்!